30 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு..

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு..

எழுதியவர்: Abubakker Sithik June 30, 2026, 4:57 pm

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சே.ரா.நவீன் பாண்டியன் பொறுப் பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசு அலுவலர்கள், பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பணியாற்றி வந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கடந்த வாரம் அரசால் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த கருப்பண்ண ராஜவேல் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்த நவீன் பாண்டியன் தென்காசி மாவட்டத்திற்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சே.ரா.நவீன் பாண்டியன் தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக 29.06.2026 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசு அலுவலர்கள், பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். கீழை நியூஸ் சார்பிலும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்..

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!