30 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்..

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik June 30, 2026, 5:53 pm

தென்காசி மாவட்ட திமுக மாணவரணி சார்பில் தமிழக அமைச்சர் டி.சரத்குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகவினர், அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் டி.சரத்குமார், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப் பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது. இதனை கண்டித்தும், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29.6.2026 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்படி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை தாங்கினார். தென்காசி நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலைக் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தியும், அவரது செயலுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் தென்காசி நகர் மன்றத் தலைவர் ஆர்.சாதிர், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் க. கனிமொழி, மாவட்டப் பொருளாளர் வடகரை ஷெரிப், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் மா. செல்லத்துரை, சேசுராஜன், சேக்தாவூது, இலத்தூர் பூ. ஆறுமுகச்சாமி, அவைத் தலைவர் முத்துப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ்.எம். ரஹீம், க.ராஜேஷ்வரன், மு. தமிழ்ச்செல்வி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மஹ்மூதா, தென்காசி நகரச் செயலாளர் சாதிர், சுரண்டை நகரச் செயலாளர் கணேசன், செங்கோட்டை நகரச் செயலாளர் வழக்கறிஞர் ஆ. வெங்கடேசன், கடையநல்லூர் வடக்கு நகரச் செயலாளர் அப்பாஸ், கடையநல்லூர் நகரச் செயலாளர் பீரப்பா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நகர, பேரூர் கழக திமுக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தலைமையில், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ஈ.ராஜா, எம்.எல்.ஏ மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பகவிநாயகம், வாசு, ஒன்றிய குழு தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் ஆகியோர் முன்னிலையில், சிவகிரி காந்தி சிலை அருகே 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!