நிலக்கோட்டையில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில், கடைகளை புதுப்பித்து தரும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும். அறிவித்தபடி பகிரங்க பொது ஏலம் நடத்த வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுவரொட்டியால் பரபரப்பு.
நிலக்கோட்டையில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில், 38 கறிக்கடைகளை புதுப்பிக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும். அறிவித்தபடி பகிரங்க பொது ஏலம் நடத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியில் பூ மார்க்கெட் தினசரி மற்றும் வார காய்கறிச்சந்தைகள், மீன் மார்க்கெட், கறிக்கடைகள் என ஒரே இடத்தில் அமைந்துள்ளது.
இதனால் இப்பகுதியில் கடைகள் நடத்த கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது மார்கெட்டில் உள்ள 38 கறிக்கடைகளுக்கு
நேற்று 25-ம் தேதி பகிரங்க பொது ஏலம் நடத்தப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இதனால், வியாபாரிகள் கறிக்கடைகளை ஏலம் எடுப்பதற்காக வைப்புத்தொகை காசோலை உள்ளிட்டவைகளை எடுத்து தயாராக இருந்தனர். ஆனால், கடந்த சனிக்கிழமை பேருராட்சி நிர்வாகம் சார்பில், 25-ம் தேதி நடைபெற இருந்த ஏலம் இரத்து செய்யப்படுவதாகவும், பழைய முறைப்படி மேலும், மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கே புதுப்பித்து கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஏலத்தில் கலந்து கொள்வதற்காக வைப்புத் தொகைகான காசோலை எடுத்து வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவர்கள் திட்டமிட்டபடி 25-ஆம் தேதி பொது ஏலம் நடத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடைகளை பொது ஏலம் நடத்தாமல், புதுப்பித்துக் கொடுப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிலக்கோட்டை ஒன்றியக்குழு சார்பில், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. தினசரி காய்கறி மார்கெட்டில் உள்ள 1-முதல் 38-வரை கறிக்கடைகளை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் ஏற்கனவே உள்ள கடைக்காரர்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து தரும் முடிவை கைவிட்டு வெளிப்படை தன்மையுடன் பகிரங்க பொது ஏலம் நடத்த வேண்டும். போராட தூண்டாதே என்ற வாசகத்துடன்
பேருந்து நிலையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.