கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் நெகிழி பொருட்கள் இல்லாத சுற்றுச் சூழலை உருவாக்கும் விதமாக, மேட்டுப் பாளையம் சோதனை சாவடியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வீசி செல்லும் நெகிழி பொருட்களை அகற்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி வனம் மற்றும் வனத்தை சார்ந்து இயற்கை சூழலில் உள்ளதால் மேட்டுப்பாளையம் வனப்பகுதி பல்லுயிர் வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் அரிய வகை பறவைகள் வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் காட்டு விலங்குகள் உள்ளது. கோத்தகிரி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் நெகிழி பொருட்களை வனப்பகுதிக்குள் வீசி சென்று விடுகின்றனர். ஆபத்தை அறியாத வன விலங்குகள் நெகிழிப் பொருட்களை உண்ணுவதாலும் கண்ணாடி பொருட்கள் குத்துவதால் வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் மேட்டுப் பாளையம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று நெகிழிப் பொருட்கள் மற்றும் கண்ணாடி குடுவைகளை அகற்றி வனப்பகுதியில் வீசப்பட்ட குப்பைகளை அகற்றினர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் ரம்யா தேவி மற்றும் கல்லூரியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பாக வன பாதுகாவலர் சசிக்குமார், வனவர் T.சிங்காரவேலு, வனக்காவலர்கள் உதயன், நாகராஜன் உட்பட வனத்துறையினர் பங்கு கலந்சு கொண்டனர். மேட்டுப்பாளையம் வனத்துறைக் உட்பட்ட கோத்தகிரி சாலையை தூய்மை செய்த ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவ மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர்.




You must be logged in to post a comment.