தவெக அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை கோரிக்கை சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் தமிழ் மாநில தலைவர் அ. சந்திரமோகன் விடுத்துள்ள அறிக்கை: சட்டமன்ற தேர்தல் காலத்தில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்களுக்கு, தவெக சார்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; தமிழ்நாட்டின் நிதிநிலை, கடன் காரணங்கள் போன்றவற்றை குறிப்பிட்டு தட்டிக் கழிக்ககூடாது.
தமிழ்நாடு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன்கள் தள்ளுபடி தொடர்பாக, 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்வதாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள பிற விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி செய்வதாகவும் தவெக தேர்தல் அறிக்கை கூறியது.
ஆனால் அதற்கு மாறாக, ரூ.50,000 ரூபாய் வரை கடன் வாங்கிய குறு விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கும் குறைவான தள்ளுபடிகளையும் அறிவித்தது. இது விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளிடம் கடும் எதிர்ப்புகளை உருவாக்கியது.
இந்நிலையில், தற்போது கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100% தள்ளுபடி எனவும், ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறுகுறு விவசாயிகள் பயிர்களைப் பொருத்த வரையில், ரூ.1,50,000- முதல் ரூ. 3 இலட்சம் வரை பயிர் கடன் வாங்குகிறார்கள். எனவே, ரூ.75,000- தான் மட்டுமே கடன் தள்ளுபடி தரப்படும் என்ற அறிவிப்பு முறையானது அல்ல! “நிலத்தை அளவீடாக கொண்டு கடன் தள்ளுபடிகளை அறிவித்து விட்டு, தற்போது கடன் தொகை அளவு வைத்து தள்ளுபடிகளை அறிவிப்பது விவசாயிகளை ஏமாற்றுவதாகும்.
எனவே, தவெக அரசாங்கம் விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்படி, “5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறுகுறு விவசாயிகளின் முழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; பிற விவசாயிகளுக்கு 50% கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.” என எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில், தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் மகாசபை மாரில தலைவர் அ.சந்திர மோகன் வலியுறுத்தியுள்ளார்.




You must be logged in to post a comment.