16 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக விவசாயிகளுக்கு வெதர்மேன் ராஜா முக்கிய அறிவிப்பு..

தமிழக விவசாயிகளுக்கு வெதர்மேன் ராஜா முக்கிய அறிவிப்பு..

எழுதியவர்: Abubakker Sithik June 16, 2026, 8:52 pm

எல்நினோ காரணமாக தென்மேற்கு பருவமழை வலு இழந்துள்ளது. எனவே தென்மேற்கு பருவமழையை நம்பி தமிழக விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட வேண்டாம் என தென்காசி வெதர்மேன் ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்த வானிலை அறிவிப்பில், கேரளா கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இனி மழை குறையும் என்பதால் தமிழ்நாட்டில் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்து அணை நீர்மட்டமும் வெகுவாக குறையும். எனவே தென்மேற்கு பருவமழையை நம்பி விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டாம். வறட்சியை தாங்க கூடிய பயிர்களை மட்டும் பயிரிடவும். வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. கடுமையான வெயிலை தமிழகம் எதிர்கொள்ள உள்ளது என வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!