15 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சி.ஐ.டி.யு மாநிலக் குழு நிர்வாகிகள் கூட்டம் ஊட்டியில் தொடக்கம்.!

சி.ஐ.டி.யு மாநிலக் குழு நிர்வாகிகள் கூட்டம் ஊட்டியில் தொடக்கம்.!

எழுதியவர்: Baker BAker June 14, 2026, 1:19 pm

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு) மாநிலக் குழு நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் தோழர் ஜி. சுகுமாறன் தலைமையில் இன்று தொடங்கியது.

இக்கூட்டத்தில் சி.ஐ.டி.யு அகில இந்திய துணைத் தலைவர் தோழர் அ. சவுந்தரராஜன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், மாநிலப் பொருளாளர் எஸ். ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் வி. குமார், திருசெல்வன், ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழிலாளர் கொள்கைகள், தொழிலாளர் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தனியார்மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை, தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்கள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறைகளின் விரிவாக்கம் போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாத்தல், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் விரிவாக்கம், ஓய்வூதியப் பாதுகாப்பு, பெண் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்தல் தொடர்பாக மாநிலம் தழுவிய பல்வேறு கோரிக்கை இயக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் மற்றும் மக்கள்திரள் இயக்கங்களை முன்னெடுப்பது குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தொழிற்சங்க முன்னணி தலைவர்கள் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!