நிலக்கோட்டை அருகே உச்சணம்பட்டியில் மூன்று மாதமாக குடிதண்ணீர் வழங்காததால், இரவில் காலி குடங்ளுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
நிலக்கோட்டை அருகே, உச்சணம்பட்டி கிராமத்தில் மூன்று மாதமாக குடிதண்ணீர் வழங்காததால், வெள்ளிக்கிழமை இரவு காலிகுடங்ளுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, நரியூத்து ஊராட்சிக்கு உட்பட்ட உச்சணம்பட்டி கிராத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கிராம மக்களுக்கு குடிதண்ணீர் கடந்த 3-மாதங்களாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், காலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள்,வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாவதாக கூறப்படுகிறது.
குறித்து அப்பகுதி மக்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பாளரிடம் கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் தண்ணீர் தொட்டி முன்பு கூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் சார்பு ஆய்வாளர் தயாளன் தலைமையிலான காவல்துறயினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், ஊராட்சி மன்ற செயலரிடமும் அலைபேசியின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.




You must be logged in to post a comment.