15 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பணப்பரிவர்த்தனை நூதன மோசடியில் ஈடுபட்ட இளைஞர்கள்! தட்டித் தூக்கிய திண்டுக்கல் காவல்துறையினர்..

பணப்பரிவர்த்தனை நூதன மோசடியில் ஈடுபட்ட இளைஞர்கள்! தட்டித் தூக்கிய திண்டுக்கல் காவல்துறையினர்..

எழுதியவர்: Askar June 13, 2026, 7:53 pm

திண்டுக்கல்லில் பணப்பரிவர்த்தனை (Money Transfer) செய்பவர்களை குறி வைத்து நூதன முறையில் மோசடி செய்த 2 பட்டதாரி வாலிபர்கள் கைது!

திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஹாஜிரம்மாள்(42) என்பவரின் தனியார் இ.சேவை மையத்திற்கு வந்த 2 மர்ம நபர்கள் தங்களுக்கு ரூ.40,000 பணம் வேண்டும்,சேவை கட்டணத்துடன் ரூ.40,800 போன் பே மூலம் அனுப்பி வைத்திருப்பதாகவும் அதற்கு பரிவர்த்தனை வெற்றிகரம் என்று செல்போனில் காட்டி நூதன முறையில் ஏமாற்றி பணத்தைப் பெற்று சென்றனர்.

இது தொடர்பாக நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் இ சேவை மையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட தர்மபுரியை சேர்ந்த சபரி(32), சேலத்தை சேர்ந்த நெல்சன்(44) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!