கொடைரோடு அருகே, இந்திரா நகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, அம்மன் பூங்கரகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொடைரோடு அருகே, இந்திரா நகர் கிராமத்தில் ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அம்மன் பூங்கரகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள, இந்திரா நகர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் முதல் நாளான வியாழக்கிழமை தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க அம்மன் பூங்கரகம் அழைப்பு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, தீசட்டி, பால்குடம் எடுத்தும், பொங்கள் வைத்தும், கிடாய் வெட்டியும் நேற்றிக்கடன் செலுத்தினர். வெள்ளிக்கிழமை அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது வழிநெடுகிலும் அம்மனுக்கு ஏராளமான பக்த்தர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
விழாவில் திண்டுக்கல், மதுரை, கோவை, சென்னை, பாண்டிச்சேரி,பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழா குழுவினர், இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.




You must be logged in to post a comment.