10 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இரண்டாக உடைந்தது அதிமுக! கட்சியில் நீடிக்கும் அடுத்தடுத்த குழப்பங்கள்..

இரண்டாக உடைந்தது அதிமுக! கட்சியில் நீடிக்கும் அடுத்தடுத்த குழப்பங்கள்..

எழுதியவர்: Askar May 11, 2026, 12:30 pm

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர். இதில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இரு அணியினராக சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். அ.தி.மு.க-வில் மீண்டும் உட்கட்சி பிரச்சனை எழுந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக தனித்தனியே ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் இரு அணிகளாக வந்துள்ளனர். பொதுவாக சட்டபேரவைக்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் முன்பே வந்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்று செல்வார்கள். ஆனால், இந்த முறை சட்டமன்றத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் வந்தார்.

அவருடன் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் உட்பட பல வந்தனர். இதைத்தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி உடன் விஜய பாஸ்கர், இசக்கிமுத்து ஆகியோர் வந்தனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களாக அ.தி.மு.க தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் இன்று அது சட்டமன்றத்திலும் அது எதிரொலித்துள்ளது.

அ.தி.மு.க இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியா? அல்லது வேறு நபரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் 13-ஆம் தேதி பெரும்பான்மையை புதிய அரசு நிரூபிக்க வேண்டும். இந்நிலையில், பேரவையில் அ.தி.மு.க யாருக்கு வாக்களிக்க போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!