தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய், இன்று பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் முதல் கையெழுத்திட்ட முதல்வர் விஜய், அதைத் தொடர்ந்து தனது முதல் உரையாற்றினார். அப்போது, ”திட்டங்களைச் செயல்படுத்த போதிய அவகாசம் வேண்டும். ஆட்சியில் ஜெயித்துவிட்டோம் என்று ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். என் அரசில் யார் தவறு செய்தாலும் விடமாட்டேன். ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள். எல்லோரும் சேர்ந்து புதிய ஆட்சியைத் தருவோம்” என்றார்.
அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் விஜய், தனது அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து, அலுவலகக் கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர், அரசு அதிகாரிகள் பலரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தசூழலில் தான், முதல்வர் விஜயின் முதல்நிலை தனிசெயலாளராக ஐஏஎஸ் பி. செந்தில்குமாரையும். இரண்டாம் நிலை தனிசெயலாளராக லட்சுமி பிரியாவையும் நியமித்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர்கள், செந்தில் குமார் சுகாதாரத்துறை செயலாளராகவும் லட்சுமி பிரியா ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராகவும் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும், பதவியேற்றதில் இருந்து ஓராண்டுக்கு பதவியேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.




You must be logged in to post a comment.