ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாம்பன் பாலம் (கிழக்கு பகுதி) வடக்கு கடற்கரை பகுதியில், அதிகாலை கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், இலங்கைக்கு பந்தயப் புறாக்களை சட்டவிரோதமாக கடத்த முயன்ற சம்பவத்தை தடுத்து, இருவரை கைது செய்தனர்.
க்யூ பிரிவு போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்ட போது, நான்கு சக்கர வாகனத்தில் 6 கூண்டுகளில் சுமார் 120 பந்தயப் புறாக்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றை படகில் ஏற்றி இலங்கைக்கு கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து, நவாப் செரிப் குமரேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் கடத்தல் முயற்சியின் பின்னணியில் செயல்பட்டுள்ள மற்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் காவல்துறையின் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தி உள்ளனர்
You must be logged in to post a comment.