23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நடிகர் ஜோசப் விஜய் இந்து மதம் ஏற்றுக்கொண்டு தாய் சமயம் திரும்பிவிட்டாரா? இராம. ரவிக்குமார் கேள்வி..

நடிகர் ஜோசப் விஜய் இந்து மதம் ஏற்றுக்கொண்டு தாய் சமயம் திரும்பிவிட்டாரா? இராம. ரவிக்குமார் கேள்வி..

எழுதியவர்: Askar April 28, 2026, 11:41 am

நடிகர் ஜோசப் விஜய் இந்து மதம் ஏற்றுக்கொண்டு தாய் சமயம் திரும்பிவிட்டாரா?

சிலுவை எந்தும் கையில் வேல்ஏந்தி
போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தேர்தல் நாடக அரசியல்!!

இந்து தமிழர் கட்சித் தலைவர்
இராம ரவிக்குமார் கண்டனம்..

தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் திரு ஜோசப் விஜய் என்பவர் இன்று திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்திருக்கிறார். இவருடன் இவருடைய பாதுகாவலர் “நயீம் மூஸா” என்ற முஸ்லிம் திருக்கோவில் உள்ளே சென்று இருக்கிறார்.

தேர்தல் பிரமாண பத்திரத்தில் தானொரு கிறிஸ்தவர் இயேசு மீது நம்பிக்கை வைத்திருப்பவன் என்று வெளிப்படையாக அறிவித்த நடிகர் ஜோசப் விஜய் அவர்களும் அல்லாஹ்வைத் தவிர வணங்கத் தகுந்த தெய்வம் வேறு எதுவும் இல்லை மற்றவை எல்லாம் சாத்தான்கள், பிற மத தெய்வங்களை வணங்குபவர்கள் காபிர்கள் என்று ஏக இறை தத்துவத்தை ஏற்றுக் கொண்ட விஜய் அவர்களின் பாதுகாவலர் “நயீம் மூஸா “அவர்களும் எந்த இறை நம்பிக்கை தத்துவ அடிப்படையில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவன் சன்னதிக்கு உள்ளே சென்றார்கள் .

தேர்தல் நாடக அரசியலில் நடிகர் ஜோசப்விஜய் சில ஜோதிடர்களின் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை வணங்கினால் “விபரீத ராஜயோகம்”
கூடி வரும் என்று சொல்லி இருக்கலாம் தவறில்லை அதற்காக தான் கிறிஸ்தவன் என்று வெளிப்படையாக அறிவித்த நடிகர் ஜோசப் விஜய் இந்து திருக்கோவிலில் எந்த மத நம்பிக்கையின் அடிப்படையில் வந்து தரிசனம் செய்தார் என்பதை
திரு விஜய் அவர்களும் திருக்கோவில் நிர்வாகமும் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி இந்து அல்லாதவர்கள் இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் திருக்கோவில் உள்ளே சென்று தரிசனம்
செய்ய அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை உள்ள நிலையில் கிறிஸ்தவரான நடிகர் ஜோசப்விஜய்,
பாதுகாவலர் நயீம் மூஸா போன்றவர்கள் எந்த மத நம்பிக்கை அடிப்படையில் திருச்செந்தூர் கோவில் தரிசனம் செய்தார்கள் ?

இந்து மதம் அல்லாத பிற மதத்தை சார்ந்தவர்கள் திருக்கோவிலில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் எனில்
நான் இந்து மதத்தை ஏற்கிறேன் :
இந்து தெய்வ வழிபாட்டை நம்புகிறேன் என்று பிரமாணம் (டிக்ளரேஷன் ) அந்தந்த திருக்கோவிலில் இருக்கும் புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டு செல்ல வேண்டும். அவ்வாறு நடிகர் ஜோசப் விஜய்,பாதுகாவலர் நயீம் மூஸாவும் இந்து மதம் ஏற்பு நம்பிக்கை புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டு சென்றார்களா? என்று குறித்து திருச்செந்தூர் திருக்கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.அவ்வாறு இல்லாது சட்டத்திற்கு புறம்பாக இந்து மத நம்பிக்கை இல்லாத நடிகர் ஜோசப் விஜய் அவர்களை திருச்செந்தூர் கோவிலில் அனுமதித்திருந்தால் அதற்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் ஜோசப் விஜய் திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார் என்பதற்காக இன்று அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்கு பெரும்பாலான பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு சிரமம் அனுபவித்திருக்கிறார்கள் இது ஏற்புடையதல்ல .
“அரோஹரா” சொல்லும் இந்துக்கைளை காக்க வைத்து விட்டு ”அல்லேலூயா” சொல்லும் நடிகர் ஜோசப்விஜய்க்கு சகல மரியாதை செய்து கோவிலுக்குள் அழைத்துச்சென்றுஇருப்பது
நியாயமில்லை.

‘”சிலுவை “ஏந்தும் கையில் “வேலை,” ஏந்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்து நடிகர் ஜோசப் விஜய் பெரிய முருக பக்தர் போல பிம்பப்படுத்தும் முயற்சி முருகப்பெருமானிடம் நல்ல ஆற்றலை
தராது.

இந்து மத விழாக்களுக்கு பண்டிகைகளுக்கும், வாழ்த்துச் சொல்லாத நடிகர் ஜோசப் விஜய் திருச்செந்தூர் தரிசனம் என்பது மனப்பூர்வமானது அல்ல தேர்தல் நாடக அரசியல்.
ஒருவேளை இந்து மதத்தை ஏற்கிறேன் என்று நடிகர் ஜோசப் விஜய் புத்தகத்தில் எழுதி இருப்பாரேயானால் இனிமேல் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது இந்து மதத்திற்கு தாய் மதம் திரும்பி விட்டார் என்று பொருள் கொள்ளலாமா ?
நடிகர் விஜய் அவர்களும் விளக்கம் அளிக்க வேண்டும் திருக்கோவில் நிர்வாகமும் விளக்கம் அளிக்க வேண்டும் .

எம்மதமும் சம்மதம் என்று உபதேச மொழிகளை இந்துக்களிடம் சொல்லாது இந்துக்களை இந்துக்களாக இருக்க விடுங்கள் அல்லேலுயா கும்பல்களை அரோகராவிற்குள் கலக்க விட வேண்டாம். அது பெரும் கேடாக அமையும். அவரவர் ஏற்றுக் கொண்ட வழிபாட்டு முறைக்கு உண்மையாக இருங்கள். திரு ஜோசப் விஜய் நல்ல நடிகர் . இந்த வழிபாட்டு முறைகளிலும் அவர் நடிகராக இருக்கக் கூடாது அவர் ஏற்றுக்கொண்ட மதத்திற்கு உண்மையானவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் .

இராம.இரவிக்குமார்
இந்துதமிழர்கட்சி
நிறுவனதலைவர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!