விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான ஆளூர் ஷாநவாஸ் மற்றும் எஸ்.எஸ். பாலாஜி ஆகிய இருவருக்கும் கட்சியில் மிக முக்கியமான உயர்மட்ட பொறுப்புகளை வழங்கி அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ-க்களான ஆளூர் ஷாநவாஸ் மற்றும் எஸ்.எஸ். பாலாஜி ஆகிய இருவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. இது அக்கட்சியினரிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு கட்சியில் முக்கிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி:
ஆளூர் ஷாநவாஸ், கட்சியின் மாநில முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.எஸ். பாலாஜி: கட்சியின் மாநிலப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் களம் காண வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் மற்றும் நிர்வாகத்தை வழிநடத்தும் மிக முக்கியமான பொறுப்புகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் வலிமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்த அதிரடி மாற்றங்களை திருமாவளவன் மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




You must be logged in to post a comment.