23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு!

தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு!

எழுதியவர்: Askar April 24, 2026, 6:36 am

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்த நிலையில், வரலாறு காணாத வகையில் 85 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதில் கரூரில் அதிபட்சமாக 92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில்  234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் முதல் பிரபு வரை திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரபமுகர்கள் என பலரும் பொதுமக்களோடு வரிசையாக நின்று தங்கள் வாக்கை செலுத்தினர்.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க என 4 முனை போட்டியில் தேர்தல் முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணியளவில் 70 சதவீத்தை கடந்த நிலையில், மாலை 6 மணிக்கு 85 சதவீதத்தை கடந்தாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, சுதந்திரம் கிடைத்தது முதல், வரலாறு காணாத வகையில் அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாக்காளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இதனிடையே இந்த தேர்தலில், 5 மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது, கரூர் – 92.64, சேலம் – 90.73, தருமபுரி – 90.14, நாமக்கல் – 90.13, ஈரோடு – 90.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது, 28 மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், குறைந்த பட்ச வாக்குப்பதிவாக, நீலகிரி – 78.95, திருநெல்வேலி 77.93, ராமநாதபுரம் – 77.03, சிவகங்கை – 76.61, கன்னியாகுமரி – 75.61 சதவீதமும் பதிவாகியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!