கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி கவிதா கல்யாண சுந்தரத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் தாலுகா சி.ஐ.டி.யு (CITU) பொதுத் தொழிலாளர் சங்கம், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்த நிகழ்வில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாஷா மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் தாலுகா சட்டமன்ற தொகுதியின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் திருமதி கவிதா கல்யாண சுந்தரத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.




You must be logged in to post a comment.