26 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik July 25, 2026, 11:33 am

தென்காசியில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் உடனே பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசியில் திமுக மாணவரணி சார்பில், நீட் தேர்வை தடைசெய்ய தவறிய ஒன்றிய அரசையும், அதனை கண்டிக்க தவறிய தவெக அரசையும் கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமை தாங்கினார். தென்காசி நகர திமுக செயலாளரும், தென்காசி நகர்மன்றத் தலைவருமான ஆர்.சாதிர், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ. சாமித்துரை, தென்காசி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம், சுரண்டை நகரக் கழக பொறுப்பாளர் கணேசன், கடையநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயா அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் மஹ்மூதா, கதிர் ஷோபானா, கலாநிதி, திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட திமுக பொறியாளர் அணி தலைவர் சே.தங்கபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் ரஹீம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அழகு தமிழ் சங்கர், மாவட்ட துணை அமைப்பாளர் சபீக் அலி, சண்முக மணிகண்டன், முத்து சுப்பிரமணியன் மற்றும் தென்காசி நகர திமுக நிர்வாகிகள் துணைச் செயலாளர் ராம்துரை, பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி வடகரை அமானுல்லா, இசக்கிமுத்து, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுமான் சாதத், வழக்கறிஞர் கசாலி, மாணவரணி மைதீன் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், டெல்லியில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் உடனே பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!