17 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நகர்மன்ற தலைவர் வீடு வீடான வாக்கு சேகரிப்பு – உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு உறுதி.!

கீழக்கரையில் நகர்மன்ற தலைவர் வீடு வீடான வாக்கு சேகரிப்பு – உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு உறுதி.!

எழுதியவர்: Baker BAker April 15, 2026, 10:16 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தேர்தல் களப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், இன்று நடைபெற்ற வீடு வீடான வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கீழக்கரை முகமது காசி அப்பா தர்கா, பட்டாணியப்பா தர்கா, பெரியகாடு உள்ளிட்ட பகுதிகளில், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் கூட்டணி கட்சியின் பெண்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மக்கள் சந்திப்பு மேற்கொண்டனர்.

வீடு தோறும் சென்ற அவர்கள், பொதுமக்களுடன் நேரடியாக உரையாடி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன், துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, “உதயசூரியன் சின்னத்திற்கே எங்கள் வாக்கு” என உறுதியளித்தது பிரச்சாரத்திற்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது. மொத்தத்தில், கீழக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வு, தேர்தல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்ததுடன், கூட்டணி தரப்பில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!