24 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பல முக்கிய தலைவர்கள் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிமுக சார்பில் வெளியீடு..

பல முக்கிய தலைவர்கள் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிமுக சார்பில் வெளியீடு..

எழுதியவர்: Askar March 25, 2026, 12:05 pm

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த தொகுதிப்பங்கீடு நேற்றுடன் நிறைவடைந்திருக்கிறது. அதேசமயம், அதிமுக கூட்டணியிலும் தொகுதிப்பங்கீடு ஏறக்குறைய நிறவடைந்துவிட்டது. நாம் தமிழர் கட்சியின் சீமான் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டு பரப்புரையில் ஈடுபட தொடங்கிவிட்டார். தவெகவில் இருந்து நாளை மறுநாள் (மார்ச் 27) முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் தான், இன்று அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, முதற்கட்டமாக 23 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 23 பேரில் 20 முன்னாள் அமைச்சர்கள். அதேசமயம், 16 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். 2021-ல் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட அவர், 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அவ்வாறு, 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல, தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் தொகுதியில் விஸ்வநாதன், கரூர் தொகுதியில், எம்.ஆர் விஜயபாஸ்கர், மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த முறை ராயபுரம் தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்த ஜெயக்குமார், இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!