24 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ராணுவ விமானம் கோர விபத்து.. வானில் இருந்து தரையில் மோதியதில் 34 வீரர்கள் பலி.. கொலம்பியாவில் சோகம்

ராணுவ விமானம் கோர விபத்து.. வானில் இருந்து தரையில் மோதியதில் 34 வீரர்கள் பலி.. கொலம்பியாவில் சோகம்

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2026, 6:31 am
கொலம்பியாவின் புடுமயோ மாகாணத்தில் உள்ள புவேர்டோ லெகுயிசாமோவில் ராணுவ விமானம் இன்று விபத்துக்குள்ளானது. விமானம் வானில் இருந்து தரைக்கு விழுந்து, மண்ணில் மோதியதும் உடனே வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த விபத்து கொலம்பியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெளிவாக இல்லை. அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் சம்பவத்திற்கான முழுமையான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!