24 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேர்தல் நன்னடத்தை விதி அமலில்: இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2.56 லட்சம் பறிமுதல் .!

தேர்தல் நன்னடத்தை விதி அமலில்: இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2.56 லட்சம் பறிமுதல் .!

எழுதியவர்: Baker BAker March 23, 2026, 11:14 am

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு அமலில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகளின் காரணமாக, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, 209-பரமக்குடி (தனி), 210-திருவாடானை, 211-இராமநாதபுரம் மற்றும் 212-முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து வாகன தணிக்கை செய்து வருகின்றன.

இந்நிலையில், இன்று (21.03.2026) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில்,

209-பரமக்குடி (தனி) தொகுதியில் ரூ.56,000,

210-திருவாடானை தொகுதியில் ரூ.1,50,000,

212-முதுகுளத்தூர் தொகுதியில் ரூ.50,150

என மொத்தம் ரூ.2,56,150 பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை வழங்கி பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Oplus_16908288

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!