குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கலந்து கொண்டு மகளிர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற மகளிர் தின விழாவில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு மாதாந்திர நாட்காட்டி வழங்கப்பட்டது.


தொடர்ந்து, பெண் கல்வி, பெண் முன்னேற்றம் போன்ற தலைப்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, மேலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்ததில் தென்காசி மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்றமைக்காக சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, கல்லூரி முதல்வர் முனைவர் அமிர்தவல்லி. மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துமாரியப்பன், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) (பொ) மரு.கீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி. மதிவதனா மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவியர்கள், பேராசிரியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.