தீபத்தூணில் தீபம் ஏற்றக்கூடாது என்று அறங்காவலர் குழு எப்போது தீர்மானம் நிறைவேற்றியது என்பதைக் காட்டுவதற்கு ஆவணங்களில் எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல, அறங்காவலர் குழு மீது அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆட்சியர் அதை மீறி உத்தரவை செயல்படுத்த முடியும்.
அப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 20-ம் தேதி உத்தரவின்படி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு குழு அனுமதிக்கவில்லை என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஆட்சியர் பின்னர் எப்படி கூற முடியும்?’ என்று வினவியுள்ளது.என்று நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்திய தொல்லியல் துறை (ASI) சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தொல்லியல் துறையின் ஒரு குழுவினர் திருப்பரங்குன்றம் கல்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று விரும்பினர், மற்றொரு குழுவினர் விரும்பவில்லை. நவம்பர் 24-ம் தேதி ஒரு குறிப்பிட்ட முறையில் அதைச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.
அனைவருக்கும் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன, மாநில நிர்வாகத்துக்கும் கொடுக்கப்பட்டது. தொல்லியல் துறைக்கும் கொடுக்கப்பட்டது.
ஆனால், தீபம் ஏற்றுவதற்காக ஆட்சியர் மேற்கொண்ட முயற்சிகள் வெறும் கண்துடைப்பு என்று தொல்லியல் துறை தரப்பு அறிக்கைகள் கூறுகின்றன. தொல்லியல் துறை குழு தர்கா நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு” என்றார்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரதான வழக்கில் இன்று விசாரணை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது




You must be logged in to post a comment.