27 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மகரந்தம் தொலைத்த மலர்களும்..!தேனை பருகாத வண்ணத்து பூச்சிகளும்..!

மகரந்தம் தொலைத்த மலர்களும்..!தேனை பருகாத வண்ணத்து பூச்சிகளும்..!

எழுதியவர்: Askar November 27, 2026, 8:17 pm

மகரந்தம் தொலைத்த மலர்களும்..!தேனை பருகாத வண்ணத்து பூச்சிகளும்..!

(முதல் பாகம்)

நில்…கவனி… துவங்கு…!
(இரண்டாம் பாகம்)

இந்த தொடர்… உங்கள் வாழ்க்கை
முறையில் (Life style) ஏதாவது ஒரு புள்ளியை மாற்றலாம்!

மகரந்த மலர் – 3

ஒரு Pizza-வில் ஆரம்பித்து இவ்வளவு அறிவுரைகளா?

ஏதோ உலகத்திலேயே நடக்காத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதுபோல் பேசுகிறீர்கள்!

என்னுடைய Friend ஆப்ரின் கையில் இரண்டு Debit Card-கள்… மூன்று CreditCard-கள்! அவளுடைய புருஷன் முழு நம்பிக்கையோடு கொடுத்து விட்டுப் போயிருக்கிறான். அவள் நினைத்த மாத்திரத்தில் புர்கா வாங்குகிறாள்… சல்வார் வாங்குகிறாள்… விதவிதமான நைட்டீஸ்கள் வாங்குகிறாள்!

ராத்திரி சமையலே கிடையாது! எல்லாமே Swiggy Order-தான்!
அவள் ஒரு தனிக்காட்டுராணி!

மாமனாரையும் மாமியாரையும் பார்த்துக்கொள்ள முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டாள்.

“அந்தக் கிழடுகளை வச்சுக்கிட்டு யார் மேய்க்கிறது?” இதுதான் அவளுடைய கேள்வி!

அவள் குடியிருப்பதோ வாடகை வீட்டில். அவளுடைய புருஷன் ஒரு ஜவுளிக்கடையில் கேஷியர்!

ஆனால், கேட்டவுடன் பணம்… நினைத்தவுடன் பொருள்… என்று சுகமாக ராணி மாதிரி வாழ்க்கை நடத்துகிறாள்!

ஆனால் நீங்கள்? MBA படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கிறீர்கள். சொந்த வீடு… சொகுசான வாழ்க்கை… உங்கள் அத்தா பயன்படுத்திய கார் வேறு!

கூடவே லக்கேஜாக உங்கள் அம்மாவும்!
கைநிறையச் சம்பாதித்து என்ன பிரயோஜனம்?

Life should be enjoyed! வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்க வேண்டும்!

ஆனால் நீங்களோ இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே புரட்டிக்கொண்டு
இருக்கிறீர்கள்! இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது!

இது Pizza, Momos, மந்தி பிரியாணி, Shawarma, Haleem என்று கலக்குகிற காலம்! நீங்களோ இன்னும் பஜ்ஜி, காரவடையைத் தாண்டி வரவில்லை!

நானும் ஒரு Graduate-தான்!
இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். நவீன உலகத்தோடு கைகுலுக்குங்கள்!
நீங்கள் எப்படி MBA Gold Medalist ஆனீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை!

இன்னும் LKG Student மாதிரியே நடந்து
கொள்கிறீர்கள்! அதுவும் உங்கள் தாத்தாவுக்குக் கேன்சர் வந்ததே?

அப்போது இந்த Fast Food கலாச்சாரம் இருந்ததா? அவருக்கு அந்தக் காலத்திலேயே கேன்சர் எப்படி வந்தது?

Fast Food சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று எந்த மடையன் சொன்னான்?

நீங்களும் ஏதேதோ கதை அளக்கிறீர்கள்!
இவ்வளவு நேரம் பேசிவிட்டேன்…

“இப்போதாவது Pizza Order செய்யவா?”
ரேஷ்மாவின் பிடிவாதம் கொஞ்சம்கூட தளரவில்லை.

அவன் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது… பள்ளிவாசலில் இருந்து மஃரிப் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. அவன் எழுந்தான்.
தொழுகைக்காகப் பள்ளிவாசலை நோக்கி நடந்தான். ரேஷ்மா மட்டும் அப்படியே அமர்ந்திருந்தாள்.
எதிரே இருந்த சுவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவளுடைய மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்!

வாழ்க்கையை அனுபவிப்பது என்றால் என்ன? பணம் சம்பாதிப்பதும்… நினைத்ததை வாங்குவதும்… விரும்பியதை சாப்பிடுவதும் மட்டும்தானா வாழ்க்கை?

வயதான பெற்றோரைப் பராமரிப்பது பழைய பஞ்சாங்கமா?

உடல்நலத்தில் அக்கறை காட்டுவது பிற்போக்குத்தனமா?

அல்லது நவீன வாழ்க்கை என்ற பெயரில் நம்முடைய பொறுப்புகளையும் உறவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக்கொண்டிருக்கிறோமா?

அவளுக்குள் எழுந்த கேள்விகளுக்கு அவளிடமே பதில் இல்லை.

மகரந்தத்தைத் தொலைத்த மலர்களும்…
தேனைப் பருகாத வண்ணத்துப் பூச்சிகளும்…

காலத்தின் மாற்றத்தோடு நாளையும் பறக்கும்!

ஆனால்…அந்தப் பறத்தலில் எதைத் தொலைக்கிறோம்?
எதைப் பெறுகிறோம்?
என்பது மட்டும் காலத்துக்கே வெளிச்சம்!

கப்ளிசேட்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!