27 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பொய்யான செய்திகளைப் பரப்பிய போலி செய்தி ரிப்போர்ட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார்!

பொய்யான செய்திகளைப் பரப்பிய போலி செய்தி ரிப்போர்ட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார்!

எழுதியவர்: Askar November 27, 2026, 8:08 pm

பொய்யான செய்திகளைப் பரப்பிய போலி செய்தி ரிப்போர்ட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார்!

பழனியின் புகழ்பெற்ற ஸ்ரீ கந்தவிலாஸ் நிறுவனம் குறித்து உண்மைக்குப் புறம்பான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி, நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் போலி செய்தி ரிப்போர்ட்டர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் செயல்பாடுகளைக் கண்டித்து, இன்று (27.11.2026) பழனி நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஸ்ரீ கந்தவிலாஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக, பழனி நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் தமிழக வெள்ளாளர் பேரவை நிர்வாகிகள் இணைந்து இந்தப் புகார் மனுவை அளித்தனர்.

மேலும், ஸ்ரீ கந்தவிலாஸ் நிறுவனம் குறித்து பொய்யான மற்றும் அவதூறான செய்திகளைப் பரப்பிய போலி  செய்தி ரிப்போர்ட்டர்கள் மற்றும் அதற்குத் தொடர்புடைய தனிநபர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஒருபோதும் ஏற்க முடியாது! தனிநபர் மற்றும் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!