கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏவான சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. ஷாநாஸிடம் நவ. 23 ஆம் தேதி நேரடியாக புகாா் தெரிவித்தாா்.
இந்த புகாரைத் தொடா்ந்து எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நவ. 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதுபற்றி வியாழக்கிழமை (நவ. 26) நீதிபதியிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக 3 நாள்களாக விசாரணை அதிகாரி எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை நடத்திய நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் வெள்ளிக்கிழமை (நவ. 27) கைது செய்யப்பட்டுள்ளார்.




You must be logged in to post a comment.