26 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை அருகே இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை!

திருவாடானை அருகே இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை!

எழுதியவர்: Baker BAker November 26, 2026, 1:36 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட திருவாடானை – திருவெற்றியூர் சாலையில் அமைந்துள்ள படப்பை மற்றும் குளத்தூர் கிராமங்களில் பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் ஆதிதிராவிட மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட ஏராளமானோர் பேருந்துக்காகக் காத்திருக்க இந்த நிழற்குடையைப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி நிழற்குடை சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, ஊர் மக்களே முன்வந்து கருவேல முட்களைக் கொண்டு நிழற்குடையைச் சுற்றி அடைத்து வைத்துள்ளனர்.

மேலும், தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள பழைய நிழற்குடையைப் பாதுகாப்பாக அகற்றி, அதே பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!