மகரந்தம் தொலைத்த மலர்களும்..தேனை பருகாத வண்ணத்து பூச்சிகளும்..!
(முதல் பாகம்)
நில்…கவனி… துவங்கு…!
(இரண்டாம் பாகம்)
இந்த தொடர்… உங்கள் வாழ்க்கை முறையில்
(Life style) ஏதாவது ஒரு புள்ளியை மாற்றலாம்!
மகரந்த மலர் – 2
குடும்பங்களில் விரிசல்கள் ஏற்படுவதற்குப் பெரிய காரணங்கள் தேவைப்படுவதில்லை.புரிதலற்ற சிறு சிறு சண்டைகளே சில நேரங்களில் பெரிய பிரிவுகளுக்கு விதையாகி
விடுகின்றன! Pizza-வில் தொடங்கியது அந்தச் சண்டை…!எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், அவளுக்குப் புரிவதாகத் தெரியவில்லை.
ஒருமுறை வாங்கி கொடுத்துவிட்டு, பிறகு பொறுமையாக புரியவைக்கலாம் என்ற மனநிலைகூட அவனுக்கும் இல்லை.
அந்த உரையாடல் இப்படியே தொடர்கிறது…ரேஷ்மா… காபி போடு! தலை வலிக்கிறது…
ஏன்…?
உங்கள் Insta காதலி இருப்பாளே! அவளிடம் போய்க் கேளுங்கள்!அட…ரேஷ்மா!
அவையெல்லாம் பொழுது போக்குக்காக பார்க்கிற ரீல்ஸ்கள்! அப்படியா…?Timepass செய்வதற்காக Instagram, Facebook… அவ்வப்போது WhatsApp…இப்படியெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், ரேஷ்மா…அதுதான் வாழ்க்கையா?அது நிஜமல்ல… நிஜத்தின் நிழல்!கண்மூடித் திறப்பதற்குள், நீர்க்குமிழியைப் போல உருவாகி மறைந்துவிடும் உலகம் அது!ஆனால், நீதான் நிஜம் ரேஷ்மா!எனக்கான உயிர் நீதான்! என் தேவைகளை உன்னிடம்தானே கேட்க முடியும்?இது உனக்குப் புரியவில்லையா?சரி… இப்போது Pizza ஆர்டர் செய்கிறேன்.பிடிவாதம் பிடிக்காதே! வேண்டாம்! சரி….கொஞ்சம் பொறுமையாக கேளு ரேஷ்மா இதுபோல தேவையில்லாமல் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடும் பழக்கமே வேண்டாம்!இன்று Pizza… நாளை வேறொன்று…இப்படியே போனால், நமக்குத் தேவையானதை வாங்குவதைவிட, நினைத்ததையெல்லாம் வாங்க வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாகும். அது நல்ல பழக்கமல்ல!
இன்றைக்கு ஒரு Pizza-வில் தொடங்கும் பழக்கம்….நாளைக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்கும் பழக்கமாகக்கூட மாறிவிடலாம்.நினைத்தவுடன் வாங்க வேண்டும்! கேட்டவுடன் கிடைக்க வேண்டும்!கையில் பணம் இருக்கிறதா, இல்லையா என்றுகூட யோசிக்காமல் Credit Card-ஐ எடுத்துப் பயன்படுத்த தூண்டும். வாங்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.பணம் செலுத்த வேண்டிய நேரத்தில்தான் அதன் சுமை புரியும்!
நேரில் கடைக்கு சென்று, கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்கும்போது, நமக்கு தேவையானதுதானா என்று ஒருமுறையாவது யோசிப்போம்.
கையில் எவ்வளவு பணம் இருக்கிறது? எதற்கு எவ்வளவு செலவிடலாம்? இதை இப்போது வாங்க வேண்டுமா? எதைப் பிறகு வாங்கலாம்?
இப்படிப் பல கேள்விகள் நமக்குள் எழும்.அந்தத் தயக்கங்களும், கணக்குப் பார்த்து செலவு செய்யும் பழக்கமும்தான்…
நம்முடைய பொருளாதாரத்தை ஓரளவுக்காவது கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.
ஆனால், இன்றைக்கு…கையில் பணம் இல்லாவிட்டாலும், கைப்பேசி மட்டும் இருந்தால் போதும்!
விரும்பிய பொருளை ஆர்டர் செய்யலாம். UPI மூலம் Google Pay, PhonePe என பணம் செலுத்தலாம்.
எல்லாமே சில நொடிகளில் முடிந்துவிடுகின்றன!
வாங்குவதற்கு முன்பு கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்ற அவசியத்தைக்கூட, இந்த வேகம் சில நேரங்களில் மறக்கடித்துவிடுகிறது.
தொழில்நுட்பம் தவறல்ல…அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்!
தேவைக்காக பயன்படுத்த வேண்டிய வசதிகள், நம்முடைய ஆசைகளைத் தூண்டும் கருவிகளாக மாறிவிடக் கூடாது.
கையில் பணமில்லாதபோதும், கடன் வாங்கி வாழ்வதற்குப் பழகிவிட்டால், ஒருநாள் அந்தக் கடனே நம்முடைய நிம்மதியை விலையாகக் கேட்டுவிடும்!
இப்படியெல்லாம் சொல்லி முடிப்பதற்குள்…ரேஷ்மா தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள்!
அவளுடைய முகத்தில் கோபமா? சலிப்பா? அல்லது அவனுடைய இடைவிடாத அறிவுரைகளால் ஏற்பட்ட சோர்வா?
எதுவென்று அவனுக்கே புரியவில்லை!அவன் மட்டும் தன்னுடைய வாதத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான்!
ஆனால், அந்த வீட்டில் இன்னொரு கேள்வி மட்டும் பதிலில்லாமல் தொங்கிக் கொண்டிருந்தது…வசதிகள் பெருகும்போது வாழ்க்கை எளிதாகிறதா?
அல்லது…ஆசைகள் பெருகும்போது வாழ்க்கை சிக்கலாகிறதா?
வண்ணத்து பூச்சிகள் நாளையும் பறக்கும்…!அவற்றின் சிறகுகளில் மகரந்தம் இருக்குமா?
அல்லது…
மாய உலகத்தின் வண்ணங்கள் மட்டும்தான் ஒட்டிக்கொண்டிருக்குமா?
கப்ளிசேட்




You must be logged in to post a comment.