23 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பழனி நால்ரோட்டில் நடுவழியில் நின்ற அரசு பேருந்து!  திடீர் பழுதால் பயணிகள் கடும் அவதி; சாலையில் நடந்து சென்றபரிதாப நிலை!

பழனி நால்ரோட்டில் நடுவழியில் நின்ற அரசு பேருந்து!  திடீர் பழுதால் பயணிகள் கடும் அவதி; சாலையில் நடந்து சென்றபரிதாப நிலை!

எழுதியவர்: Askar November 23, 2026, 11:13 pm

 பழனி நால்ரோட்டில் நடுவழியில் நின்ற அரசு பேருந்து!  திடீர் பழுதால் பயணிகள் கடும் அவதி; சாலையில் நடந்து சென்றபரிதாப நிலை!

திண்டுக்கல் மாவட்டம், பழனி நால்ரோடு பகுதியில் ரணகாளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதடைந்து சாலையின் நடுவே நின்றது.

போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய சாலையில் அரசு பேருந்து நடுவழியில் நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையடுத்து பேருந்திலிருந்து இறங்கிய பயணிகள், மாற்றுப் பேருந்து வசதி உடனடியாக கிடைக்காததால், வேறு வழியின்றி தங்களது உடைமைகளுடன் சாலையிலேயே நடந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பொதுமக்களின் அன்றாட போக்குவரத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் அரசு பேருந்துகள், நடுவழியில் பழுதடைந்து நிற்பது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, பழுதடைந்த பேருந்தை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், அரசு பேருந்துகளை முறையாகப் பராமரித்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!