இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை இருபாலர் பள்ளியாக மாற்றும் முயற்சிக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 40 ஆண்டுகளாக பெண்களுக்காக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் போதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவிகள் சிரமப்படுவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வராண்டாக்களில் வகுப்புகள் நடத்தப்படும் அவலநிலையை முதலில் சரிசெய்யாமல், பள்ளியின் தனித்தன்மையை மாற்ற முயற்சிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆண்களுக்கென தனியாக அரசு மேல்நிலைப்பள்ளியை உருவாக்குவதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும், பெண்கள் பள்ளியை மாற்ற வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மாணவிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் மெத்தனம் காட்டும் அதிகாரிகள், பள்ளியின் அடையாளத்தை மாற்றுவதில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பெற்றோர்கள், பள்ளியை இருபாலர் பள்ளியாக மாற்றும் முடிவை கைவிட்டு, உடனடியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.