23 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோயிலுக்கு நன்கொடை வழங்கியதால் முன்விரோதம் ; 14 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்!

கோயிலுக்கு நன்கொடை வழங்கியதால் முன்விரோதம் ; 14 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்!

எழுதியவர்: Baker BAker November 23, 2026, 10:06 pm

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே செவல்பட்டி கிராமத்தில் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, 14 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் 15 புகார் மனு அளித்துள்ளனர்.

செவல்பட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கோயில் கட்டுவதற்காக குடியரசு என்பவரது குடும்பத்தினர் நன்கொடை வழங்கியுள்ளனர். இதற்காக கோயிலில் வைக்கப்பட்டிருந்தவும் ஏழு பேர் உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து குடியரசு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே குடியரசு குடும்பத்தினரை ஏழு பேர் கொண்ட நிர்வாகிகள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குடியரசுவின் தாத்தா உயிரிழந்தபோது இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் உள்ளிட்ட மேலும் 13 குடும்பங்களையும் சேர்த்து மொத்தம் 14 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர் மனு அளித்துள்ளனர்.

கோயிலுக்கு நன்கொடை வழங்கிய விவகாரத்தில் தொடங்கிய முன்விரோதம், தற்போது 14 குடும்பங்கள் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் முடிந்துள்ளது. இச்சம்பவம் கடலாடி சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!