20 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இளைஞர் கைது..

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இளைஞர் கைது..

எழுதியவர்: Askar November 20, 2026, 7:19 pm
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இளைஞர் கைது.. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இளைஞரை இருப்புப்பாதை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 18-ஆம் தேதி காலை 8 மணியளவில், நாகர்கோவில் ரயில் நிலையத்தின் 13-வது யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டி எண் 16366 ரயிலின் பின்பக்க மாற்றுத்திறனாளிகள் பெட்டியில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து நாகர்கோவில் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் இருப்புப்பாதை காவல்துறையினர் 194 BNSS பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வழக்கு 103(1) BNS கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க காவல் ஆய்வாளர் கேத்தரின் சுஜாதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், கடந்த நவம்பர் 14-ஆம் தேதி காலை 8 மணியளவில், 4 மற்றும் 5-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டியிலிருந்து வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்த நபர் ஒருவர் இறங்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்தத் தடயத்தை வைத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன் ஐயப்பன் (31) என்பது தெரியவந்தது. கடந்த 4 மாதங்களாகப் பராரியாகச் சுற்றித் திரிந்து வந்த இவர், கடந்த 14-ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் 5-வது நடைமேடையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத அந்தப் பெண்ணை ஆள்நடமாட்டமற்ற மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொடூரமாகத் தாக்கிப் பலத்த காயங்களை ஏற்படுத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, குற்றவாளி ஐயப்பனைக் கைது செய்த இருப்புப்பாதை காவல்துறையினர், உரிய விசாரணைக்குப் பின் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!