20 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வேடசந்தூர் அருகே 323 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்! ஒருவர் கைது!

வேடசந்தூர் அருகே 323 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்! ஒருவர் கைது!

எழுதியவர்: Askar November 20, 2026, 7:58 pm

வேடசந்தூர் அருகே 323 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்! ஒருவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெங்களூரிலிருந்து அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் வேடசந்தூர் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன் அவர்களின் மேற்பார்வையில்வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் வேடசந்தூர் அய்யர்மடம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த Ashok Leyland Dost வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 11 பெட்டிகளில் சுமார் 323 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்த வாகனத்தை ஓட்டி வந்த சுரேஷ் (36)கைது செய்தனர் மேலும் இதில் சம்மந்தப்பட்ட கோவை அன்னூரை சேர்ந்த பொன்ராஜ்(42) என்பவரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ் என்பவர்
வாகனத்தில் இருந்த 323 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 368 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 396 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 4171 கிலோகிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை:

திண்டுக்கல் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!