20 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் குடிநீர் ஊரணியில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீரால் நோய்த்தொற்று அபாயம்; உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

ராமநாதபுரத்தில் குடிநீர் ஊரணியில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீரால் நோய்த்தொற்று அபாயம்; உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

எழுதியவர்: Baker BAker November 20, 2026, 5:49 pm

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு கான்சாகிப் தெருவில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பால், வெளியேறும் கழிவுநீர் சாயக்கார ஊரணியில் கலப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கான்சாகிப் தெருவில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேறி தெருக்கள் மற்றும் சாலைகளில் வழிந்தோடுகிறது. இந்தக் கழிவுநீர் அருகிலுள்ள சாயக்கார ஊரணியில் நேரடியாகக் கலப்பதால், குடிநீர் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் ஊரணி நீர் மாசுபட்டு வருகிறது.

மேலும், சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குடிநீர் ஆதாரமாக விளங்கும் சாயக்கார ஊரணியில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள இந்தப் பிரச்சினையில் நகராட்சி நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாமல் பாதாள சாக்கடை அடைப்பை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். ஊரணியில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தூய்மைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!