27 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலோர கிராமங்களின் குடிநீர் தாகம் தீர்க்க ரூ.12 லட்சத்தில் புதிய குடிநீர் நிலையம்!

கடலோர கிராமங்களின் குடிநீர் தாகம் தீர்க்க ரூ.12 லட்சத்தில் புதிய குடிநீர் நிலையம்!

எழுதியவர்: Baker BAker October 27, 2026, 9:59 pm

ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.5-க்கு வழங்க ஏற்பாடு – அமைச்சர் திறப்பு.! மேலும் 20 இடங்களில் அமைக்கத் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட காரங்காடு, மோர் பண்ணை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ரூ.12 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மருத்துவர் வி.கே. ராஜீவ் திறந்து வைத்தார்.

இந்த நிலையத்தின் மூலம் பொதுமக்கள் ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ரூ.5 செலுத்திப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டண முறையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும், இதுபோன்று 20 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர கிராம மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடிநீர் நிலையம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!