20 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொண்டி அருகே பயங்கர சாலை விபத்து: அஞ்சல் துறை ஊழியர் உயிரிழப்பு.!

தொண்டி அருகே பயங்கர சாலை விபத்து: அஞ்சல் துறை ஊழியர் உயிரிழப்பு.!

எழுதியவர்: Baker BAker July 19, 2026, 3:31 pm

பணிக்குச் சென்றபோது மினி பேருந்து மோதி விபத்து – எஸ்.பி. பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், தொண்டி அஞ்சல் துறையில் மத்திய அரசு ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

இன்று வழக்கம்போல் பணிக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட அவர், பனஞ்சாயல் விலக்கு அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி பேருந்து எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தொண்டி நற்பணி மன்ற தன்னார்வலர்கள், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தொண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடல் உடற்கூறாய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!