20 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.!

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.!

எழுதியவர்: Baker BAker July 19, 2026, 3:14 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் மஹாலில், ரோட்டரி சங்கத்தின் 2026–2027-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாண்டிற்கான சங்கத் தலைவராக ரொட்டேரியன் சித்திரவேலு, செயலாளராக ரொட்டேரியன் ஹாஜி சபீர், பொருளாளராக ரொட்டேரியன் சுப்ரமணியன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

விழாவிற்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் மரு. எபினேஷ் பென்சம் தலைமை வகித்து, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் ராஜன் மருத்துவமனை நிறுவனர் ரொட்டேரியன் மரு. ஜோசப் ராஜன் மற்றும் ராம்நாடு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் துணை மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சங்கத்தின் பட்டயத் தலைவர் ரொட்டேரியன் அலாவுதீன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, முன்னாள் தலைவர் சிவகார்த்திக், முன்னாள் செயலாளர் அந்தோணி சதீஸ் மற்றும் முன்னாள் துணை மாவட்ட ஆளுநர் சுந்தரம் ஆகியோர் கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைப் பணிகள் குறித்த ஆண்டறிக்கையை சமர்ப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான ரொட்டேரியன்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இறுதியாக, சங்கத்தின் செயலாளர் ரொட்டேரியன் ஹாஜி சபீர் நன்றியுரை வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!