பூங்கரகம், பால்குடம், அக்னிச்சட்டி, காவடி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அளிந்திக்கோட்டை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குட உற்சவம், பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
கடந்த ஜூலை 8-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய குண்டம் திருவிழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட உற்சவத்தை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் சித்தி விநாயகர் மற்றும் பாலமுருகன் கோவிலில் இருந்து பூங்கரகம், பால்குடம், அக்னிச்சட்டி, பறவைக் காவடி மற்றும் முளைப்பாரி ஏந்தி மேளதாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த பக்தி ஊர்வலம், மாசாணி அம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து அருள்பெற்றனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.




You must be logged in to post a comment.