27 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வறுமை வாசலில்… திறமை உச்சியில்!” – பேச்சாற்றலில் அசத்தும் மாணவி முகிலாவுக்கு உதவிக்கரம் நீட்டப்படுமா?

வறுமை வாசலில்… திறமை உச்சியில்!” – பேச்சாற்றலில் அசத்தும் மாணவி முகிலாவுக்கு உதவிக்கரம் நீட்டப்படுமா?

எழுதியவர்: Baker BAker June 27, 2026, 4:00 pm

 

கண்பார்வையற்ற தாய்… பெயிண்டர் தந்தை… வாடகை வீடு… ஆனால் மாநிலம் முழுவதும் ஒலிக்கத் தகுந்த பேச்சுத்திறன்! பொருளாதார நெருக்கடியால் கனவுகள் சிதையக் கூடாது என  உருக்கமான கோரிக்கை.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவி முகிலா, வறுமையை வென்று தனது அபாரமான பேச்சாற்றலால் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார். நான்கு வயது முதலே மேடைகளில் தன்னம்பிக்கையுடன் பேசி, மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வென்றுள்ளார்.

 

 

திறமைக்கு எல்லையில்லை என்பதை நிரூபித்த இந்த மாணவியின் குடும்ப வாழ்க்கை மட்டும் கடும் பொருளாதார சுமையால் தத்தளித்து வருகிறது. தாயார் கடுமையான நோயால் கண்பார்வையை இழந்த நிலையில் உள்ளார். குடும்பத்தின் ஒரே ஆதாரமாக தந்தை பெயிண்டர் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை நம்பியே குடும்பத்தை நடத்தி வருகிறார். வாடகை வீட்டில் வசிக்கும் இவர்களுக்கு கல்விச் செலவுகளையே சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

பேச்சுத்திறனில் மாநில அளவில் சாதிக்கும் திறன் இருந்தும், பயிற்சி, உயர்கல்வி மற்றும் போட்டிகளில் பங்கேற்க தேவையான பொருளாதார வசதிகள் இல்லாததால் மாணவி முகிலாவின் கனவுகள் கேள்விக் குறியாகியுள்ளன.

 

“எனது படிப்பை இடைநிறுத்தாமல் தொடரவும், என் பேச்சுத்திறனை மேலும் வளர்த்துக் கொள்ளவும் அரசு, கல்வி அறக்கட்டளைகள், தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று மாணவி முகிலா உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

 

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திறமையை ஊக்குவிப்பது சமூகத்தின் பொறுப்பு என்பதை உணர்ந்து, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறை, சமூக நலத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி உதவி வழங்கும் அறக்கட்டளைகள் மற்றும் நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள் மாணவி முகிலாவின் கல்வி, பேச்சுத்திறன் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 

“திறமைக்கு வறுமை தடையாக இருக்கக் கூடாது; ஒரு மாணவியின் எதிர்காலத்தை காப்பாற்றுவது சமூகத்தின் கடமை” என்ற உணர்வோடு, இந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட அரசு மற்றும் சமூக அமைப்புகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  உதவி செய்ய விரும்புபவர்கள் நேரடியாக அவருடைய தந்தைக்கு தொடர்பு கொள்ளவும் தந்தையின் தொடர்பு எண் +919629267146

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!