18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா பரிசளிப்பு

ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா பரிசளிப்பு

எழுதியவர்: mohan January 27, 2020, 7:12 pm

ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மக்கள் தொடர்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன், போக்குவரத்தை சிறப்பாக ஒழுங்குபடுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மு.முத்துராமலிங்கம், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் ரத்தம் தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி ரத்தம் சேகரிப்பில் சிறந்த ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் மற்றும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை விபத்தின்றி ஓட்டிய டிரைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நினைவு பரிசு வழங்கினார்.வட்டார போக்குவரத்து அலுவலர் க.செல்வக்குமார், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.லயோலா இக்னேஷியஸ், முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி,அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் பா. தமிழ்மாறன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!