முத்துப்பேட்டைக்கு நேரில் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் – மலர்வளையம் வைத்து மலர் மாலை அணிவித்து அஞ்சலி!
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் குடும்பப் பூர்வீகத் தொடர்புடைய ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில், அவரது தாத்தா சேனாதிபதி பிள்ளையின் கல்லறைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இன்று நேரில் வருகை தந்து மரியாதை செலுத்தினார்.
முத்துப்பேட்டை முதலமைச்சர் விஜயின் தந்தை சந்திரசேகரின் பூர்வீக ஊராகும். இங்குள்ள சேனாதிபதி பிள்ளையின் கல்லறைக்குச் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், அங்கு மலர்வளையம் வைத்து, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா, மீனவர் சங்கத் தலைவர் சின்னத்தம்பி, காங்கிரஸ் கட்சியின் தேசிய மீனவர் பிரிவுத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் விஜயின் குடும்பப் பூர்வீக ஊரில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு அப்பகுதியில் கவனம் பெற்றது.




You must be logged in to post a comment.