16 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்காக அவசர ரத்ததானம் செய்த திமுக நிர்வாகி அசரப் அலி!

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்காக அவசர ரத்ததானம் செய்த திமுக நிர்வாகி அசரப் அலி!

எழுதியவர்: Baker BAker October 13, 2026, 4:41 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் அவசர ரத்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், வடக்கு ஒன்றியச் செயலாளருமான வழக்கறிஞர் அசரப் அலி இன்று அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ரத்ததானம் செய்தார்.

அவசரக் காலங்களில் ரத்ததானம் செய்வதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில், அவரது இந்த மனிதநேயச் செயல் அமைந்தது. உரிய நேரத்தில் ரத்ததானம் செய்து நோயாளிகளின் உயிர்காக்க உதவிய அசரப் அலியின் செயல் பலரது பாராட்டைப் பெற்றது.

இந்நிகழ்வின்போது, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை நோயாளிகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஷானவாஸ் உடனிருந்து தேவையான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.

அவசரத் தேவையை உணர்ந்து உடனடியாக ரத்ததானம் செய்து உதவிய வழக்கறிஞர் அசரப் அலிக்கு மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!