17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பு கடித்து வியாபாரி உயிரிழப்பு; கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தென்காசி எம்.பி. ஆய்வு..

பாம்பு கடித்து வியாபாரி உயிரிழப்பு; கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தென்காசி எம்.பி. ஆய்வு..

எழுதியவர்: Abubakker Sithik October 13, 2026, 11:54 am

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் பாம்பு கடித்த வியாபாரி சுடர்மணி, அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மருத்துவ அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக, தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் கடையநல்லூர் அரசு மருத்துவ மனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ மனையை பார்வையிட்டு சம்பவம் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் எனவும், இரவு பணி மருத்துவர் பணியில் இல்லாதது குறித்தும் செவிலியர்களின் அலட்சியப் போக்கு குறித்தும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை பெற வரும் புற நோயாளிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய உள்ளதாக கூறப்பட்டதற்கு, புற நோயாளிகள் வெகுநேரம் காத்திருக்காத வகையில் விரைவாக சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனைக்கு தேவையான கட்டிட வசதி மற்றும் மருத்துவ உபகரண தேவைகள் குறித்து கேட்டறிந்து உள்ளதாகவும், மருத்துவ மனையை நான்கு மாடி போதிய வசதியுடன் கூடிய கட்டிடமாக உயர்த்துவது தொடர்பான கோப்புகள் தேக்க நிலையில் இருப்பதாகவும்,  குறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார்.

மருத்துவமனை ஆய்வின் போது நாடாளுமன்ற உறுப்பினருடன் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் மருத்துவ அலுவலர் அனிதா பாலின், ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!