17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையை சீரமைக்ககோரி மஜகவினர் ஆர்ப்பாட்டம்..

சாலையை சீரமைக்ககோரி மஜகவினர் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik October 13, 2026, 9:45 am

நெல்லையில் மேலப்பாளையம் – அம்பை சாலையை சீரமைக்க கோரி மஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலப்பாளையம் – அம்பை சாலையை சீரமைக்க கோரி கொட்டும் மழையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் செடிகளை நடுரோட்டில் நட்டு மாநில செயலாளர் அலிஃப் A. பிலால் ராஜா தலைமையில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலப்பாளையம் – அம்பை சாலை நீண்ட காலமாக சீரமைக்கட்படாமல் முதன்மையாக மேலப்பாளையம் பகுதி மக்களும், பாளையங்கோட்டையில் தொடங்கி பாபநாசம் வரையில் செல்லக்கூடிய அனைத்து மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விபத்துக்கள் அன்றாடம் தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினரிடம் மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் குணசேகரன், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

நிறைவாக போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க ஆவன செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பொதுமக்களை திரட்டி பெரும் போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் என நெடுஞ்சாலை துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடத்தில் மஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அஜீஸ், மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், பகுதி செயலாளர் சிந்தா, பகுதி துணை செயலாளர் மஸ்தான், பகுதி வர்த்தக அணி செயலாளர் ஹைதர் அலி, கோழி சுலைமான், மைதீன், இஜாஸ், அர்ஷத், அபுல், ஜலீல், மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

மஜக சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சாலையின் நடுவில் சென்டர் மீடியன் என்று சொல்லக்கூடிய தடுப்புச் சுவர் அமைப்பதற்காக கலெக்டர் தலைமையிலான ரோடு சேஃப்டி மீட்டிங்கில் கோப்புகள் வைக்கப்பட்டுள்ளது. சூழலின் தீவிரத்தை மாவட்ட ஆட்சியருக்கு நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் விளக்கி உள்ளனர். விரைவாக கலெக்டர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டு ஒரு வார காலத்தில் செண்டர் மீடியன் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒரு வார காலத்தில் முழுவதுமாக சாலை புதியதாக அமைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளிடம் உத்தரவாதம் அளித்துள்ளனர். காவல்துறை, நெடுஞ்சாலை துறை, அதிகாரிகளுக்கும், ஊடகத் துறையிருக்கும் மனித ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றி.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!