17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விஐபி நம்பர் பெற போலி ஆவணம்; கார் டீலர் கைது..

விஐபி நம்பர் பெற போலி ஆவணம்; கார் டீலர் கைது..

எழுதியவர்: Abubakker Sithik October 13, 2026, 8:59 am

விஐபி நம்பர் பெறுவதற்கு அரசு ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரசு உதவிச் செயலாளர் பெயரில் போலி ஆணை தயாரித்து, காருக்கு விஐபி (விருப்ப) பதிவெண் பெற முயன்ற கார் டீலர் முத்துப்பாண்டி (32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் TN-76-BU-0001 என்ற விஐபி எண் பெறுவதற்காக, சென்னை அரசு உதவிச் செயலாளரால் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படும் ஆணையினை சமர்ப்பித்து, புளியரை மடத்தறை பாறையை சேர்ந்த லாராபேசன்ஸ் என்பவரின் பெயரில் ஒருமுறை கடவுச்சொல் பெறப்பட்டு, ஆன்லைன் மூலமாகவும் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த குறிப்பிட்ட விஐபி எண்ணை கடையத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் முறைப்படி விண்ணப்பித்திருந்தது. இதனால் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சமர்ப்பிக்கப்பட்ட அரசு ஆணை போலியானது எனத் தெரியவந்தது.

இது குறித்து தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருநெல்வேலி அருகே பொன்னாகுடி தெற்குத் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் முத்துப்பாண்டி 32, என்பது தெரிய வந்தது. புதிய கார் ஷோரூம் ஒன்றில் டீலராகப் பணிபுரியும் முத்துப்பாண்டி என்பவர் போலி ஆவணம் தயாரிப்பில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து மோசடி செய்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!