16 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உச்சிப்புளியில் முதன்முறையாக மாநில அளவிலான ஹாக்கி போட்டி!

உச்சிப்புளியில் முதன்முறையாக மாநில அளவிலான ஹாக்கி போட்டி!

எழுதியவர்: Baker BAker October 12, 2026, 9:18 am

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பகுதியில் முதன்முறையாக மாநில அளவிலான 7s ஹாக்கி போட்டி இருமேனி ஜமாஅத் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. உஜ்ஜைனி ஹாக்கி கிளப், உச்சிப்புளி சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

 

இப்போட்டியில் திருநெல்வேலி ஹாக்கி விஸார்ட்ஸ் அணி முதலிடம் பிடித்து ரூ.15,000 பரிசுத் தொகையையும், இராமநாதபுரம் டவுன் ஹாக்கி கிளப் அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ.10,000 பரிசுத்தொகையையும், விருதுநகர் ரெட் ரோஸ் ஹாக்கி கிளப் அணி மூன்றாம் இடம் பிடித்து ரூ.5,000 பரிசுத்தொகையையும் வென்றன.



பரிசளிப்பு விழாவில் இருமேனி ஜமாஅத் தலைவர் ஜனாப் சீனி ஹபிபுல்லா, இருமேனி இஸ்லாமிய இளைஞர் அமைப்புத் தலைவர்  சரிபு அகமதுகனி, தமிழ்நாடு வாணிபக் கழக மேற்பார்வையாளர் ஆ. குமாரவடிவேல், இருமேனி தி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி பொறுப்பாளர் மைனா முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தலைமை விருந்தினர்களாக ஹாக்கி இராமநாதபுரம் அமைப்பின் முதுநிலைத் துணைத் தலைவர்  செல்லத்துரை அப்துல்லா, இராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா நாகேந்திர சேதுபதி, ஹாக்கி இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சேதுபதி, இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.



முதல் பரிசான ரூ.15,000-ஐ பிள்ளைமடத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சீனி மாரி வழங்கினார். இரண்டாம் பரிசான ரூ.10,000-ஐ இராமநாதபுரம் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் இராஜாராம் பாண்டியன் கோபால் மற்றும் இருமேனி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் வழங்கினர்.

 

மூன்றாம் பரிசான ரூ.5,000-ஐ கே.டி.ஆர். ஹாக்கி அகாடமி செயலாளரும், இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநருமான சவேரியர் வழங்கினார்.

 

மூன்று போட்டிகளுக்கான கோப்பைகளை மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் அன்பளிப்பாக வழங்கினார். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான கோப்பைகளைத் திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் முருகபூபதி அன்பளிப்பாக வழங்கினார்.

 

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை உஜ்ஜைனி ஹாக்கி கிளப் செயலாளர் சிரஞ்சீவி மற்றும் ஹாக்கி இராமநாதபுரம் துணைச் செயலாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

உச்சிப்புளி பகுதியில் முதன்முறையாக நடைபெற்ற மாநில அளவிலான இப்போட்டி, அப்பகுதி இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் ஹாக்கி மீதான ஈடுபாட்டையும் அதிகரிக்கும் வகையில் அமைந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!