கேரளாவில் இருந்து 94 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 லட்சம் மதிப்பிலான 94 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம், இலத்தூர் காவல் நிலையம் இன்று (08.10.2026) கேரளா மாநிலத்திலிருந்து சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில், இ-விலக்கு பகுதியில் வைத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த இலத்தூர் காந்தி காலனியை சேர்ந்த நல்லகண்ணு மகன் முத்துமாரி (43), பொன்னுச்சாமி மகன் முத்துராஜ் (33), சீவநல்லூர் இந்திரா காலனியை சேர்ந்த கதிரவன் மகன் சுரேஷ் இளவரசன் (31) மற்றும் வல்லம் இந்திரா காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் சதீஷ் (19) ஆகிய நான்கு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய 01 நான்கு சக்கர வாகனம், 02 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 02 லட்சம் மதிப்பிலான 94 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.