17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில் கருவறைக்குள் புகுந்த நல்ல பாம்பு!

கோவில் கருவறைக்குள் புகுந்த நல்ல பாம்பு!

எழுதியவர்: Baker BAker October 8, 2026, 9:58 am

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட அருள்மிகு பிடாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தற்போது கோயிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், கருவறைக்குள் திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருவறைக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் பூசாரி, உடனடியாக அங்கிருந்து வெளியேறி, திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பு பதுங்கியிருந்த இடத்தைச் சுற்றி மிகுந்த கவனத்துடன் தேடுதல் மேற்கொண்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, கொடிய விஷத்தன்மை கொண்டதாகக் கூறப்படும் நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்து பத்திரமாக மீட்டனர்.

பின்னர், பிடிபட்ட பாம்பை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.

கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருவதால், தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்நிலையில், கருவறைக்குள் நல்ல பாம்பு புகுந்த தகவல் அறிந்ததும் கோயில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

எனினும், தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு பாம்பை பாதுகாப்பாக மீட்டதையடுத்து, பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் நிம்மதி அடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!