ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மறுபுறம் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை செல்லும் பிரதான குடிநீர் குழாய், தோணிப்பாலம் அருகே உடைந்து பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் பெருமளவில் வீணாகி வருகிறது.
குடிநீருக்காக கிராம மக்கள் காலிக்குடங்களுடன் அலைந்து, தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைத்து, குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குடிநீர் குழாய் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.